மார்ச் 2 இல் பாராளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம்

0
84

மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என அர­ச­த­ரப்பு வட்டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வருகின்­றது.

8 ஆவது பாரா­ளு­மன்றின் ஆயுட் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முடி­வ­டை­கின்­ற­தா­யினும், 19ஆவது திருத்தச்­ சட்­டத்தின் படி ஜனா­தி­பதி நான்­கரை வரு­டங்கள் முடிந்த பிறகு பாரா­ளு­மன்றை கலைக்க முடியும்.

அந்த வகையில் மார்ச் 1ஆம் திக­திக்குப் பின்னர் ஜனா­தி­ப­தியால் எத்­த­ரு­ணத்­திலும் பரா­ளு­மன்றம் கலைக்­கப்படலாம். அநே­க­மாக மார்ச் 2 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டால் ஏப்ரல் மாதத்தின் இறு­திக்குள் பொதுத்­ தேர்­தலை நடத்த முடியும் என அரச தரப்பு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கலைக்­கப்­பட்ட திகதியிலிருந்து 3 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட வேண்டும் என்பதும் அரசியலமைப்பு விதியாகும்.