மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்சந்தைப்படுத்தும் சபையில் நியாய விலையில் நெல்கொள்வனவு செய்ய நடவடிக்கை

0
110
சிறு போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் நெல் விற்பனையில் விவசாயிகள் எதிர்நோக்கும் விலைப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் முகமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட மட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாட்டை மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுத்து செல்லும் முகமாக இன்று (18) அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று மாவட்ட செயகத்தில் நடைபெற்றது.
விலை நீர்ணயத்தை நெல் சந்தைப்படுத்தும் சபையினரால் நீர்ணயிக்கப்பட்டு நியாயமாக விலையில் நெற்கொள்ளவனவு செய்வதற்காக சகல விதமான ஆக்கபூர்வமான சகல நடவடிக்கைகளும் அடுத்தவாரம் முதல் மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்த விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீகாந்த ,; காணி மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் ,கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத்,விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எஸ்.பெரின்பராஜா,மாவட்ட செயலகத்தில் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் ,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் , உரச்செயலக பிரதிநிதிகள் ,பிரதேச செயலாளர்கள் ,இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப்பிரிவின் அதிகாரிகள் ,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்;தி , பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இக்கலந்துறையாடல் பங்குபெற்றியிருந்தனர்.
கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்ற நெற்களை களஞ்சியப்படுத்துகின்ற செயற்பாட்டில் சில சவால்கள் காணப்படுவதாகவும் அதற்காக 9 களஞ்சிய சாலைகள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கு மேலதிகமாக 6 களஞ்சிய சாலைகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு அவசர திருத்தற் பணிகளை மேற்கொண்டு அங்கு நெற்களை களஞ்சியப்படுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை 60459 ஹக்டெயரில் நெற்கள் பயிரிடப்பட்டுள்ளதாகவும் இவ்விளை நிலங்களில் இருந்து அதிகளவான அறுவடைகளை விவசாயிகள் எதிர்பாத்துள்ளதாகவும் அதிகளவான நெற்கள் கொள்வனவு செய்யும் போது திருகோணமலை ,வெலிகந்தை, பொலநறுவை போன்ற பகுதிகளிலுள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சிய சாலைகளில் களஞ்சியப்;படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டத்தில் விவசாயிகளுக்கும் நன்மைபயக்கும் செயற்திட்டங்களை மேலும் புதிய ஜனாதிபதியினால் மேற்கொள்வதாகவும் கலந்துரையாடப்பட்டது.