தமிழ் மக்களின் அவசிய தேவைகளை உணர்த்திய தமிழ்தேசிய பொங்கல் விழா

0
220

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தமிழ்தேசிய பொங்கல் விழா இன்று(18) சனிக்கிழமை பட்டிப்பளை விளையாட்டு மைதானத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில், பொங்கல் பொங்கி, படைக்கப்பட்டு பூசை ஆராதனைகளும் நடைபெற்றன.

அரங்கின் முன்னால், விவசாய செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதன்போது தமிழ்தேசிய பொங்கல் விழாவின் அவசியம் மற்றும் தமிழ் மக்களின் தேவை குறித்தான விடயங்கள் குறித்தும் கருத்துக்கள் பகிரப்பட்டன. மேலும், வசந்தன், நடனம் போன்ற நிகழ்வுகளுடன், தமிழ்மக்களின் தேவை குறித்தான பட்டிமன்றமும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண, நகர, பிரதேச சபை உறுப்பினர்களும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வசந்தன், நடனம் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.