கல்முனையில் களைகட்டிய பிரமாண்டமான தைப்பொங்கல் விழா!அரசஅதிபர் பங்கேற்பு

0
82

கல்முனைப்பிராந்திய தமிழ் இளைஞர்; சேனை வருடாந்தம் நடாத்திவரும் தைப்பொங்கல் பெருவிழா நேற்று (15) புதன்கிழமை கல்முனை மாநகரில் கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனை பழைய பஸ்தரிப்பு நிலையமருகில் இளைஞர் சேனைத்தலைவர் பி.சங்கீத் தலைமையில் பொங்கலிட்டு வழிபட்ட இப்பெருவிழா நேற்று காலை 10மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக கல்முனை மாநகரில் மாட்டுவண்டில் ஊர்வலம் இடம்பெற்றது. அதில்கொணர்ந்த பொங்கல் பொருட்களைக்கொண்டு பொங்கலிடப்பட்டு பூஜையும் இடம்பெற்றது.

விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் ஏனைய அதிதிகளாக மேலதிக அரச அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் எ.ஜே.அதிசயராஜ் உள்ளிட்டே பலர் கலந்துகொண்டனர்.

ஆன்மீக அதிதிகளாக கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ. க.கு சச்சிதானந்தசிவம் குருக்கள் கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்னதேரர் கல்முனை பங்குத்தந்தை ஆகியோர்கலந்துகொண்டனர்.

கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் படைத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்;.
கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. அதிதிகளின் உரைகளும் இடையிடையே இடம்பெற்றன.

அதனையொட்டி கல்முனை மாநகரம் தோரணங்களாலும் நந்நதிக்கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.