கல்குடா கல்விவலயத்தில் 400மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.

0
523

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட அதி கஸ்டப்பாடசாலைமாணவர்கள் 400பேருக்கு முனைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கொம்மாதுறையைச்சேர்ந்த காலம் சென்ற இரா.பத்மநாதனின் முதலாம் ஆண்டினைமுன்னிட்டு சுவிஸ்நாட்டில் வசிக்கும் அவரது புதல்வர்களான சூரியகுமாரன்,சந்திரகுமாரன், விஜயகுமாரன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பிலே இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.;
நிகழ்வில் முனைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மாணிக்கப்போடி குமாரசாமி,அமைப்பின் பொருளாளர் அரசரெட்ணம் தயானந்தரவி,பணிப்பாளர் சபையைச்சேர்ந்த பத்மநாதன் சந்திரகுமார் உட்பட பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை வெள்ளநிவாரண நடவடிக்கையின் மற்றுமொரு செயற்பாடென முனைப்பின் நிருவாகப்பணிப்பாளர் தாந்தியான் வேதநாயகம் தெரிவித்தார்.
அத்துடன் இவ்மனிதாபிமானப்பணிக்கு நிதியுதவிகள் வழங்கிய அமரர் இராஜதுரை பத்மநாதன் குடும்பத்தினருக்கு முனைப்பின் இலங்கைக்கிளை சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக முனைப்பின் தலைவர் மா.சசிகுமார் தெரிவித்தார்.