புளியந்தீவு ரிதத்தின் வருட இறுதி கலை நிகழ்வு…

0
501

மண்முனை வடக்குப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற இளைஞர் கழகங்களுள் ஒன்றான புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் வருட இறுதி கலை நிகழ்வும், சிறுவர் விளையாட்டு பரிசில்கள் வழங்கல் மற்றும் கௌரவிப்புக்கள் என்பன இன்றைய தினம் கழகத்தின் முன்னாள் தலைவரும், ஆலோசகரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான அ.கிருரஜன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன், கழகத்தின் முன்னாள் முதற் தலைவர் மே.விஜயராஜ், மட்ஃஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார், மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் ர.பிரவீன், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் உட்பட கழக நிருவாகிகள், முன்னாள் உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் மணம் கமழும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் சிறார்கள், இளைஞர்களின் விநோத, வித்தியாசமான கலை நிகழ்வுகள் மற்றும் சிறுவர் விளையாட்டுகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன. நிகழ்வின் விசேட அம்சங்களாக கழகத்தின் முன்னாள் தலைவர்கள் கௌரவிப்பு, பரதநாட்டியத்தில் கிண்ணஸ் சாதனை சான்றிதழ் பெற்ற கழக உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு, பிரதம அதிதிக்கான கௌரவிப்பு எனப் பல்வேறு விசேட அம்சங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது