பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கிரமமான முறையில் நிவாரண பொருட்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை  மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் அரசசார்பற்ற நிறுவனங்களுடன்  (07.12.2019) இன்று முக்கிய கலந்துரையாடல் 11மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கிரமமான முறையில் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டுள்ளது.

வழங்கப்படவிருக்கின்ற உலர் உணவு பொருட்கள் தரமானதாகவும் சிறந்ததாகவும்  இருப்பதை உருதி செய்து கொள்வதும் இடைத்தங்கள் முகாம்களில் தங்கியிருக்கின்ற மக்களுக்கு வழங்கப்பட்டு வருக்கின்ற  சமைத்த உணவு தரமானதாக அமைவதற்கு கிராம சேவக உத்தியோகத்தர்கள,; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள்,  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் தங்களின் கண்காணிப்புகளையும் அவதானிப்புகளையும் செலுத்தி சிறந்த முறையில் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுகொண்டார்.

இன்று முதல் 12 இடைதங்கள் முகாம்களில் 64 குடும்பங்களை சேர்ந்த 1915 பேர் தற்போது முகாம்களில் தங்கியுள்ளனர். மாவட்டத்தின் 12 பிரதேச செயலகபிரிவுகளை சார்ந்த 15019 குடும்பங்களின் 51433 பேர் வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஓப்பிட்டளவில் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டமே வெள்ள அனர்த்தத்திற்கு கடுமையான பாதிப்பை எதிர்நோக்கிய மாவட்டமாகும்.