தளபாடம் வழங்கி வைப்பு

திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்தினால் திருகோணமலை பொது வைத்தியசாலை புற்றுநோய் சிகிற்சை பிரிவுக்கு ஒரு தொகுதி தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் வைத்து பொது வைத்தியசாலை பணிப்பாளரிடம் இவை கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருகோணமலை ஹீரோ லீயோ கழகத்தினரும் பங்கு கொண்டிருந்தனர்.