நாட்டில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடில்லை

0
77

நாட்டில் மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடில்லை என்று சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவின் பணிப்பாளர் ஏ.ரி.சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டிற்குள் தேசிய ரீதியில் 145 மருந்து வகைகள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த 4 வருட காலப்பகுதியில், மருந்துக்கான செலவினம் 45 பில்லியன் ரூபாவிலிருந்து 53 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலவசமாக இவற்றை வழங்குவதற்காக 8 பில்லியன் ரூபா மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கூறினார்.

சேனக பிபில மருந்துக் கொள்கை மிகவும் வெற்றிகரமாக கடந்த 4 வருட காலப்பகுதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளுரில் மருந்து வகைகள் தயாரிப்பதை ஊக்குவித்தல், விலைக்கட்டுப்பாடு தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவின் பணிப்பாளர் ஏ.ரி.சுதர்ஷன தெரிவித்தார்.