மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி முதலிடம் : கிழக்கு மாகாணத்தில் அம்பாறை வலயத்திற்கு முதலிடம்.

0
201

அண்மையில் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தைச் சேர்ந்த 404 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளனர். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் அம்பாறை கல்வி வலயத்தைச் சேர்ந்த 433மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று மாகாணத்தில் முதன்நிலையை அடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இவ்வருடம் கடந்த ஆண்டைவிட அதிகமான மாணவர்களை புலமைப்பரிசில் வழங்குவதற்காக தெரிவுசெய்துள்ளனர். இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.

குறிப்பாக 1100க்கு மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டைவிட, இவ்வருடம் கிழக்கு மாகாணத்தில் புலமைப்பரிசிலுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 404பேரும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 399பேரும், பட்டிருப்பு கல்வி வலயத்தில் 232பேரும், கல்குடா கல்வி வலயத்தில் 162பேரும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 78பேரும் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற வலயங்களின் தரவரிசையில் திருகோணமலை வடக்கு கல்வி வலயம் இறுதிநிலைப் பெற்றிருக்கின்றது. இதில் 21மாணவர்களே மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.