பொதுசொத்துக்கள் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டால் முறையிட தொலைபேசி இலக்கம்

0
78

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொதுச்சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுமாயின் அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுமாயின், அதுகுறித்து முறைப்பாடு செய்வதற்கான அவசரசேவை தொலைபேசி இலக்கங்களை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு அறிமுகம் செய்திருக்கிறது.

 

அதன்படி தேர்தல் பிரசாரங்களின் போது பொதுச்சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல் தொடர்பான முறைப்பாடுகளை 076-3223662, 076-3223448 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது  pppr@tisrilanka.org    என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ மேற்கொள்ள முடியும்.