கரடியனாறு மகா வித்தியாலய சாரணர் வெள்ளி விழா நிகழ்வு!

0
210

மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலயத்தின் 25 வது ஆண்டு சாரணர் வெள்ளி விழா நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலத்தின் 25 ஆவது ஆண்டு சாரணர் வெள்ளி விழா தீபாசரை நிகழ்வு அண்மையில் இரவு 07 மணியளவில் பாடசாலை மைதாணத்தில் நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் ஆர்.செந்தில்நாதன் தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்;.ஸ்ரீதரன் கலந்துகொண்டிருந்தார்,சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு முகாமைத்துவ பிரதி கல்விப்பணிப்பாளர் ஜெயக்குமார், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் ஏறாவூர்; பற்று மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.முருகேசப்பிள்ளை , மட்டக்களப்பு மேற்கு உதவி சாரண ஆணையாளர் வி.சுப்ரமணியம், கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.சமரகோன் மற்றும் ஏறாவூர் பற்று மேற்கு கோட்ட அதிபர்கள், மண்முனை மேற்கு கோட்ட அதிபர்கள், சோபா நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.ஜெயந்தன் ஏறாவூர்பற்று பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.மணிராஜ் மற்றும் பொது அமைப்புகள் கிராம அபிவிருத்திச் சங்கம் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இம்முறை 25ஆவது ஆண்டு வெள்ளிவிழா சாரணர் பாசறை நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் பாடசாலையின் சாரணர் பயிற்சி ஆசிரியர் இரா.நாயனன் அவர்களினால் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இம்முறை சாரணர் வெள்ளி விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு சாரணர் தினம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டதுடன் தேசியக்கொடி, பாடசாலையின் கொடி மற்றும் சாரணர் கொடி ஏற்றிவைக்கப்பட்டு , தேசியகீதம் , சாரணர் கீதமும் இசைக்கப்பட்டு தீப் பாசறை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களினால் விழிப்புணர்வு நாடகங்கள், பாடல்கள் மற்றும் பலநிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர் எஸ.;ஸ்ரீதரன் இச் சாரணர்பாசரையைப் பார்த்து மிகவும் மிகழ்ச்யும் வியப்பைடைந்தேன், உண்மையிலேயே இதை ஒழுங்குசெய்த பாடசாலையின் சாரணப் பயிற்றுவிப்பாளர் இரா.நயனன் ஆசிரியர் அவர்களுக்கு என் ஆத்மார்தமான பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையிலேயே ஆசியரியர் நயனன் போன்றவர்கள்களினால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்புறும் என்பதில் மாற்றமில்லை அனைத்துப் அதை அவர் இந் நிகழ்வின் ஒழுங்கமைப்பின் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறவேண்டும் என்பதே எமது அவா.

தொடர்ந்தும் உரையாற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர்

அண்மையில் நடைபெற்ற பரிச்சை பெறுபவர்களை பார்த்தோமானால் எமது மாணவர்கள் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 25 பதக்கங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள். இந்த வெற்றிகளை பெற்ற மாணவர்கள் யாருமல்ல நீங்கள்தான் அதுமட்டுமல்லாது எமது வலயத்தில் கூட விசேட தேவையுடைய மாணவர்கள் பல பதக்கங்களை பெற்றுள்ளார்கள். இந்த மாணவர்களும் இப்பிரதேசத்தில் பிறந்த முத்துக்கள்தான் அதேபோன்று அண்மையில் ஆங்கிலத்தினப் போட்டியில் பத்து இடங்களை பெற்று 5 முதலிடங்களை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள.; உண்மையில் இதுவும் ஒரு பாராட்டத்தக்க விடயமாகும். அதேபோன்று அன்மையில் தமிழ் தின போட்டிகளில் எமது வலயத்தைச் சேர்ந்த மாணவிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை தேசிய மட்டத்தில் பெற்றுத் தந்துள்ளார்கள். இது உங்களுக்கு ஒரு மைல்க்கல் இது மட்டுமல்ல எமது வலயம் இன்னும் பல வெற்றிகளைபெற காத்துக்கொண்டிருக்கின்றன.

இலங்கையிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சாரண மாணவர்கள் உள்ளனர். சாரணன் என்றால் அதற்கு மிகப்பெரிய ஒரு மரியாதை உண்டு அண்மையில் நாங்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மற்றும் தாந்தாமலை ஆகிய ஆலயங்களிலே பாதுகாப்புக்காக இறுதிச் திருவிழா நாளில் எமது பணிகளை ஆற்றி இருந்தோம்.

நாம் அங்கு மிகவும அவதானித்தோம் சாரணர்கள் சொல்கின்ற கட்டளையை பல பொதுமக்கள் கேட்டு நடந்தார்கள் அந்தளவுக்கு கௌரவமும், கண்ணியமிக்க சாரணர்கள் நீங்கள்.

பல பாடசாலைகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டன ஆரம்பித்து சில நாட்களிலேயே அவை மறைந்துவிட்டன. செயலிழந்த அனைத்துக்கும் உயிர் கொடுக்க வேண்டிய கட்டாய தேவையில்நாம் உள்ளோம் எனவும் தொடர்ந்தும் உரையாற்றினர்.