திருகோணமலையில் மினி சூறாவளி ; 11 வீடுகளுக்கு கடும் சேதம்

0
189

திருகோணமலை – பம்மதவாச்சி  பகுதியில் மினி சூறாவளியினால் பதினொரு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் மானிய அடிப்படையில் மட்டுமல்லாது கடன் அடிப்படையில் வழங்கிய  கடன்களை பெற்று வீடுகளை நிர்மாணித்து வந்து கொண்டிருந்த வேளை இயற்கை அனர்த்தம் இன்னும் வறுமையின் பக்கம் இழுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்த போது தாங்கள் சந்தோஷமாக இருந்ததாகவும் ஆனாலும் வீசிய காற்றினால் வீடுகள் சேதமாக்கப்பட்டது மிகவும் மன வேதனை தருவதாகவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட 11 வீடுகளையும் புனரமைப்பதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் உடனடியாக கவனம் எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.