குடும்ப சுகாதார சேவை பதவிக்கான பயிற்சியாளர்கள்

0
411

சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய மருத்துவ துறை அமைச்சு 2019 ஆம் ஆண்டுக்காக குடும்ப சுகாதார சேவை பதவிக்கு பயிற்சியாளர்களாக 850 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த 30 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட வகையில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவிப்பு இடம்பெறவில்லை. இதன் காரணமாக இது ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு இலத்திரனியல் முறைப்படி Online மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். சுகாதார அமைச்சின் இணையத்தளமான www.health.gov.lk இல் இது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளமுடியும்.