பாதுகாப்பு செயலாளர் , இராணுவதளபதி ஆகியோர் சீயோன் தேவாலயத்திற்கு விஜயம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டனர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டகோட இராணுவதளபதி மகேஷ்  சேனநாயக்கா கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர உட்பட இராணுவ அதிகாரிகள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ரூபாய் 28 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கீழ் இராணுவ பொறியியல் பிரிவினரால் நிர்மாணிக்கப்பட்டு வரும் புணரமைப்புப் பணிகளை பார்வையிட்டனர்.

இங்கு இராணுவத்தினரால் புனர்நிர்மாணித்துவரும் கட்டிடத்தை பார்வையிட்டு இது தொடர்பாக ஆராய்ந்தனர். இதன்போது ஊடகவியலாளுர்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் தற்கொலை குண்டுதாக்குதல் இடம்பெற்ற இந்த சியோன்
தேவாலயத்தை இராணுவத்தினர் புனர் நிர்மானித்து வருகின்றனர். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பு சீராக உள்ளதாகவும் தாக்குதலில் சேதடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னேற்றகரமாகவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கொட்டகொட தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பார்வையட்ட பின்பு மேலும் கருத்துத் தெரிவிக்கையிலேயே சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாரும் இவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு பாதுகாப்பு ஏற்பாடுகளை இராணுவம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.