மண்முனை தென் எருவில் பற்று கோட்டத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்

0
1347

மண்முனை தென் எருவில் பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பு.திவிதரன் இன்று கடமையை பொறுப்பேற்றார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கற்று கலைமாணி  பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், பாவற்கொடிச்சேனை பாடசாலையில் 2013 ஆண்டு  தொடக்கம் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில் நடாத்தப்பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவை பரிட்சையில் சித்தியடைந்து,    2017 ஆம் ஆண்டு  தொடக்கம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கடமையாற்றி வந்த நிலையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்று இன்றைய தினம் மண்முனை தென் எருவில் பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.