ஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்

0
214

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் சுகயீனப் போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அச்சங்கத்தின் செயலாளர் செஹான் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடித்து வருவதினாலேயே, இச்சுகவீனப் போராட்டம் மேற்கொள்ளப்ப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

thinakkural