இவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை

0
139

இவ்வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் 16.07.2019 நள்ளிரவு நிகழவுள்ளது.

பகுதியளவிலான இச்சந்திரகிரகணத்தை இலங்கையில் காணக்கூடியதாக இருக்கும் என, கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளில் இச்சந்திர கிரகணத்தை காணமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது 17 ஆம் திகதி 12.13 அளவில் இச்சந்திர கிரகணம் ஆரம்பமாகும்.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வருவதன் காரணமாக ஏற்படும் பூமியின் நிழல் சந்திரனில் விழ ஆரம்பித்தது முதல் அதிலிருந்து மெதுவாக விலகும் வரை, அதிகாலை 5.47 மணி வரை இச்சந்திரகிரகணம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.