திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 41 ஆவதுதலைவராக ஆ. உதயராஜன்

0
184

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 41 ஆவதுதலைவராக ஆ. உதயராஜன்  அவர்கள் பதவி ஏற்க்கும்நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில்ஞாயிற்று கிழமை அன்று இடம் பெற்றது.

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழகதலைவர் அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ், கழகம் சார்பில்வரவேற்பு உரை நிகழ்தினார்.

செயலாளர் ரகுராம்  திருகோணமலை ரோட்டரி  கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தைகொடுத்தார்

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நா மணிவண்ணன் – கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் கலந்துகொண்டார். இதன்போது கடந்த ஆண்டின் தலைவர்அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ் புதிதாக தெரிவானதலைவர் ஆ.உதயராஜனுக்கு தலமைப்பதவியை வழங்கிவாழ்த்து தெரிவித்தார்.. புதிய அங்கத்தவராக உதயண்ணன்   அவர்கள் இணைத்துக் கொள்ளப்படார்.

பிரதம விருந்தினர் அவரது உரையில் றோட்டரிக்கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவைபுரிவதாக பாராட்டினார். சரியான தேவையுள்ளமக்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். அத்துடன்இளைனர்களுக்கான தேவைகளையும்  அவர்களுடையபிரச்சனைகளையும், முக்கியமாக போதை மருந்துபாவனை பற்றி கவனம் செலுத்துமாறு வேண்டிக்  கொண்டார்