மட்டக்களப்பில் வீசிய பலத்தகாற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

0
258

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் வீசிய பலத்த காற்றினால், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துமாறும் அப்பகுதிகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பணிப்புரைவிடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்; வீசிய பலத்த காற்றினால் 70 வீடுகளும் 283 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த சேவைகள் நிவாரண நிலைத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்தகாற்று அண்மையில் வீசியது. இவ்வனர்த்தத்தின் காரணமாக பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன.

இவ்வனர்த்தத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தின் கொத்தியாபுலை, புதியமண்டபத்தடி காஞ்சிரங்குடா, இலுப்படிச்சேனை மண்டபத்தடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, 62குடும்பங்களை சார்ந்த 247 நபர்களும், 58 வீடுகளும், 4 சிறுகடைகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மண்முணைபற்று ஆரயைம்பதி பிரதேசசெயலகப் பிரிவில் அமைந்துள்ள மண்முனையில் 1குடும்பமும், மாவிலங்குதுறையில் 1 குடும்பமும் காங்கையன்ஓடை தெற்கில் 2குடும்பமும், காங்கையன்ஓடையில் 1குடும்பமும், ஆரையம்பதியில் 1குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உதவிப்பணிப்பாளர் மேலும் கூறியிருந்தார்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துமாறும் அப்பகுதிகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பணிப்புரைவிடுத்துள்ளார். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிக்கு முதற்கட்டமாக 10.000ரூபா வழங்கப்படவுள்ளது. மேலும், இடி மின்னல் தாக்கத்தினால் செங்கலடி பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட செங்கலடியை சேர்ந்த ஒருவர் கொடுவாமடுவில் வைத்து மின்னல் தாக்கத்திற்கு இலக்கான் ஒருவர் மரணமடைந்துள்ளார் அவருடைய மரண செலவிற்காக பிரதேசசெயலாளர் என்.வில்வரெத்தினம் 15.000ரூபாவை வழங்கியிருந்தார்.