சிறிசேனவிற்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பூஜித்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் பொலிஸ்மாஅதிபர் பூஜித்ஜயசுந்தர புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில்  சாட்சியமளிக்கையில் அவர் பல அதிர்ச்சிதகவல்களை வெளியிட்டுள்ளார்.

சிஐடியை சேர்ந்த  முக்கிய விசாரணை அதிகாரியொருவரை பதவி விலக்குமாறு  ஜனாதிபதி எனக்கு அழுத்தங்களை கொடுத்தார் என பூஜித்ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் முதல் ஜனாதிபதி நான் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டங்களில் கலந்துகொள்வதை விரும்பவில்லை எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுக்கவேண்டாம் என தெரிவித்தமை பின்னர் தெரியவந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கபில வைத்தியரட்ண நான் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டிய தேவையில்லை என ஜனாதிபதி தெரிவித்தார் என எனக்கு  தெரிவித்தார் என பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

 

பாராளுமன்ற தெரிவுக்குழுவினரின் கேள்விக்கு பதிலளித்துள்ள பொலிஸ்மா அதிபர் சிஐடியின் விசாரணை அதிகாரி  நிசாந்தவை இடமாற்றம் செய்யுமாறு  தனக்கு அழுத்தம் கொடுத்தார் என  தெரிவித்துள்ளார்.