முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளை துறக்குன்றனர்.

0
495

அரசில் வகிக்கும் பதவிகள் அனைத்தையும் கூட்டாக துறப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் முடிவு செய்திருப்பதாக அறியமுடிகின்றது.

இன்று காலை நடந்த கூட்டம் ஒன்றையடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ள அவர்கள் இதுகுறித்து தற்போது அலரி மாளிகையில் பிரதமர் ரணிலுடன் பேச்சு நடத்தி வருவதாக தெரிகிறது.

அமைச்சர்,இராஜாங்க அமைச்சர் ,பிரதியமைச்சர் மற்றும் ஆளுநர்மார் இவ்வாறு பதவிகளை துறந்தாலும் அவர்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள மாட்டார்களென சொல்லப்படுகிறது .

கண்டியில் ரத்தன தேரர் நடத்தும் போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் ஆதரவு கிடைத்துள்ள தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான தீர்மானத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்துள்ளனர்.

நன்றி

தமிழன் செய்திகள்