வடகிழக்கில் 2 6 ஆயிரத்தி800 மில்லியன் ரூபாய் நிதியுதவியில்நீர்ப்பாசன விவசாய புதிய திட்டங்கள்

வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட ஆறு மாகாணங்களில்  உலகவங்கியின்  சுமார் 2 6 ஆயிரத்தி800 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய புதிய திட்டங்களை அமுல் படுத்த  விவசாய,கால்நடை அபிவிருத் தி,நீர்ப்பாசன மற்றும் கடற் றொழில் நீரிய வளங்கள் அமைச்சு நடவடிக்கையில் இறங்கியுள்ளது .

இதன்படிஇந்த புதியதிட்டங்களை கிழக்கு மாகாணத்தில் மட்டக் களப்பு ,அம்பாறை  ,திருகோணமலை,வடமாகாணத்தில் கிளி நொச்சி, முல்லைத்தீவு,வடமேல் மாகாணத்தில் குருநாகல் ,புத்தளம்,வடமத்தியமாகாணத்தில் பொலநறுவை ,அனுராதபுரம் மாவட்டங்களில்அமுல்படுத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இத்துடன்   ,ஊவா மாகாணத்தில் மொனராகலை, தென்மாகாணத் தில்  ஹம்மாந்தோட்டைஆகிய 1 1 மாவட்டங்களிளிலும்  அமுல் படுத்த  விவசாய, கால்நடை அபிவி ருத்தி,நீர்ப்பாசன மற்றும் கடற் றொழில் நீரிய வளங்கள் அமைச்சு அங்கீகாரம் வழங்கியிருப்பதாக இத்திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் எந்திரி.வீ.சிவலிங்கம் தெரிவித்தார்.

இந்த விசேட விவசாய நீர்ப்பாசன திட்டத்தில் நீர்ப்பாசன குளங்கள் ,கை விடப்பட்ட அணைக்கட்டுகள் புனரமைப்பு,விவசாயகிணறுகள் ,விவசாயப் பாதைகள்,கிராமியவிவசாயஉற்பத்திபொருள்  சந்தை கட்டிடங்கள் நிறுவு தல்  ,கமநலசேவை நிலையங்களின் புனர மைப்பு,தரமான கால நிலை மாற்றத்தின் புதியபயிர்வகைகளின் விதை உற்பத்தி நாற்று மேடைகளை உருவாக்குதல் ,விவசாயி களுக்கும் விவசாய சேவை உத்தியோகத்தர் களுக்கு நவீன தொழில் நுட்பமுறையிலான பயிற்சிகளை வழங்குதல் ,உட்பட பல்வேறு விவசாய அபிவிருத்தி திட்டங் களை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை, கரடி யனாறு கமநல சேவைகள் நிலையப்பிரிவுகள் இந்த விசேட நீர்ப் பாசன விவசாய திட்டம் அமுல்படுத்தப்படவுள் ளது, இந்த திட்டங் களின் செயல்பாடுகளை தெளிவூட்டும் செயல மர்வு மாவட்ட அர சாங்க அதிபர்.மாணிக்கம் உதய குமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று( 3 ௦) இடம்பெற்றது,

விவசாய அமைச் சின்  திட்டப்பணிப்பாளர் எந்திரி.வீ.சிவலிங்கம் ,பிரதி திட்டபணிப்பாளர்  ஆர்.ஆரியசிங்க மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர். திருமதிசசிகலா புண்ணி யமூர்த்தி, மாவட்ட விவசாய பணிப்பாளர் வை. வீ. இக்பால், மட்டக் களப்பு  கமநலசெவைகள் உதவிப்பணிப்பாளர், கே .ஜகன்நாத்,விவசாய பிரதிப்பணிப் பாளர் வீ.பேரின்பராசாஉட்பட பல திணைக்களங்களின்அதிகாரிகள் ,விவ சாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்

இதில் மட்டக்களப்பில் 2500 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.