இலங்கைக்கான பயணத் தடையை நீக்கியது சுவிற்ஸர்லாந்து

0
147

இலங்கையில் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றமடைந்துள்ள நிலையில், சுவிற்ஸர்லாந்து தனது நாட்டு மக்களுக்கான பயணத்தடையை நீக்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து, இலங்கைக்கான சுற்றுப் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்த்து.

எவ்வாறாயினும், தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் உரிய முறையில் பாதுகாப்பை கடைப்பிடிக்குமாறு சுவிற்ஸர்லாந்துஅரசாங்கம்,  அந்நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.