ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாக பதவிகளில் இருந்து நீக்க வேண்டும்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாக பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரி, ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி வெளியிடும் கருத்துக்களை மிகவும் அடிப்படைவாதமானவை. அவர் தமது மக்களை போருக்கு அழைக்கின்றார். அவர் இனவாதத்தை பரப்புகிறார்.
இது நாட்டு மக்கள் மத்தியில் காணப்படும் நிலைப்பாடு. அதேபோல் ஹிஸ்புல்லா பல்லைக்கழகம் என்ற பெயரில் மக்கள் மூளையை சலவை செய்யும் தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளார்.
இவர்களுக்கு எதிராக பாரிய மக்கள் சக்தியை உருவாக்கி, பிக்குமார்கள் இணைந்து இவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவர்களை ஜனாதிபதியினாலேயே பதவியில் இருந்து நீக்க முடியும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார். JM