முஸ்லிம்களின் வர்த்தகம் பெரிதும் பாதிப்பு.

0
502
நாட்டில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு

எதி­ரான வெறுப்­பு­ணர்வு அதி­க­ரித்­துள்ள நிலையில், இதன் கார­ண­மாக முஸ்­லிம்­களின் வர்த்­தக நட­வ­டிக்­கை­களும் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பகு­தி­க­ளி­லுள்ள முஸ்லிம் வியா­பார நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரிக்­கு­மாறும் முஸ்­லிம்­க­ளுடன் வர்த்­தக கொடுக்கல் வாங்­கல்­களை மேற்­கொள்ள வேண்டாம் எனவும் பகி­ரங்க பிர­சா­ரங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
இந் நிலையில் வர்த்­தக நிலையம் ஒன்றின் முன்­பாக ”இந்த விற்­பனை நிலை­யத்தில் இதன் பின்னர் எந்த முஸ்லிம் நிறு­வ­னத்­திற்கும் உரிய பொருட்கள் விற்­பனை செய்­யப்­ப­ட­மாட்­டாது” என்றும் ”எந்த முஸ்லிம் நிறு­வ­னத்­தையும் சேர்ந்த விற்­பனை பிரதிநிதிகள் எவரும் அவர்­களின் பொருட்­களை எடுத்து வர வேண்டாம்” என்றும் எழு­தப்­பட்ட அறி­வித்­தல்கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. இதன் புகைப்­ப­டங்கள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. எனினும் இந்த அறி­வித்தல் எந்தப் பிர­தே­சத்தில் ஒட்­டப்­பட்­டுள்­ளது என்­பது தெரி­ய­வ­ர­வில்லை.
இதற்­கி­டையில் வெளி­யூர்­களில் வர்த்­தக நிலை­யங்­களை நடாத்தும் காத்­தான்­குடி பிர­தே­சத்தைச் சேர்ந்த வர்த்­த­கர்­களும் பலத்த அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. வெளி­யூர்­களில் வாட­கைக்கு கடை­களைப் பெற்று வர்த்­த­கத்தில் ஈடு­படும் காத்­தான்­குடி வர்த்­த­கர்­களை, குறித்த கடை­க­ளி­லி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு அதன் உரி­மை­யா­ளர்கள் கேட்டுக் கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த சுமார் 200 அங்­காடி வியா­பா­ரிகள் வழ­மை­போன்று வெளி­யூர்­க­ளுக்குச் சென்று வியா­பா­ரத்தில் ஈடு­பட முடி­யா­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
மேலும் கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுடன் வர்த்­தக தொடர்­பு­களை மேற்­கொள்ள வேண்டாம் எனவும் முஸ்லிம் பகு­தி­க­ளுக்கு வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் ஒரு குழு­வினர் துண்டுப் பிர­சு­ரங்கள் மற்றும் ஒலி­பெ­ருக்கி அறி­வித்தல் மூலம் கேட்டுக் கொண்­டுள்­ளனர்.
இதற்­கப்பால் நாட­ளா­விய ரீதியில் முஸ்லிம் சார­தி­க­ளுக்குச் சொந்­த­மான முச்­சக்­கர வண்­டி­களில் ஏறு­வ­தற்கு பெரும்­பான்மை இன மக்கள் மறுப்­ப­தா­கவும் ஏலவே வழங்­கப்­பட்ட வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்­கான ஓடர்­களை இரத்துச் செய்­துள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் வர்த்­த­கர்கள் தெரி­விக்­கின்­றனர். சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்­பி­லுள்ள பிர­பல முஸ்லிம் கேக் தயா­ரிப்பு நிபுணர் ஒருவரிடம் நிகழ்வு ஒன்றுக்காக முன்கூட்டியே ஓடர் செய்யப்பட்ட 500 கேக் துண்டுகளுக்கான கேள்வியை அவை தயாரிக்கப்பட்ட பின்னர் வாடிக்கை யாளர் இரத்துச் செய்துள்ளதாக குறித்த பெண் கேக் தயாரிப்பு நிபுணர் தனது டுவிட்டர் கணக்கில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli