களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை தற்போதைய நிலை சுகாதார அமைச்சரை சந்திக்க முடிவு.

0
241
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய நிபுணர்களை நியமிப்பது தொடர்பான அவரச கூட்டம் ஒன்று இராசாசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிகுடி சமூத்திரபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இம்முறை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வைத்திய நிபுணர்களுக்கான இடமாற்றப்பட்டியலில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்திய நிபுணர்கள் அனைவரும் இடம்மாற்றம் செய்வதற்காக அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு பதிலாள் எவரும் பரிந்துரைக்கப்படவில்லை இதனை தொடர்ந்து வைத்தியசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்த விரைந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டே குறித்த அவசர கூட்டடானது எற்பாடு செய்யப்பட்டது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மதனழகன், வைத்திய அத்தியட்சகர் ப.சதீஸ், சுகாதார வைத்திய அதிகாரி கி.ரமேஸ், தோல் வைத்திய நிபுணர் க.தமிழ்வண்ணன், போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ப.குணராஜசேகரம், மற்றும் வைத்திய அதிகாரிகள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை பிரதேச சபை உறுப்பினர்கள் வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர்,சங்கங்கள் கழகங்களை சார்ந்த பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது வைத்தியசாலையில் நிரந்தரமாக வைத்திய நிபுணர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் கலந்த கொண்ட வைத்திய நிபணர்களினால் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்த கொண்ட ஏனையோரிடமும் குறித்த விடயம் தெர்டர்பில் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. தற்காலிகமாக வைத்தியசாலையில் நிபுணர்களை எவ்வாறு வரவழைக்கலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடாத்தப்பட்டதுடன். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஏகோபித்த முடிவாக சுகாதர அமைச்சரினை நேடியாக சந்தித்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பததென தீர்மானிக்கப்பட்டது…….பழுகாமம் நிருபர்