சம்மாந்துறையில் இன்றும் ஆயுதங்கள் மீட்பு.

0
396
பாறுக் ஷிஹான் –
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தைக்கா பள்ளிவாசல் வீதிக்கு அருகாமையில் இன்று(2) திடிர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் 4 வாள்கள், 2 கத்திகள், 1 செயலிழந்த தொலைநோக்கி ,4 செயலிழந்த கைத்தொலைபேசிகள்,  ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள்27, மான் கொம்பில் தயாரிக்கப்பட்ட கூரான உபகரணங்கள் ,என்பனவற்றை கைப்பற்றினர்.

இதன் போது ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் அப்பகுதியில் உள்ள நீர் வடிந்தோடும் கால்வாயில் பொலித்தீன் ஒன்றினால் சுற்றப்பட்டு போடப்பட்டிருந்தன.அத்துடன் இரு வேறு வீடுகளில் இருந்து மற்றைய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
எனினும் இத்தேடுதல் நடவடிக்கையானது காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மதியம் 12.30 மணி வரை தொடர்ந்தது.எந்த சந்தேக நபர்களும் இச்சுற்றிவளைப்பில் கைதாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.