தபாலில் அனுப்பப்படும் பொதிகள் அதிகாரிகள் முன்னிலையில் பொதியிடப்பட வேண்டும்

நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைமையை கருத்திற்கொண்டு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம்  பொறுப்பேற்குமாறு அனைத்து தபால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரிய ரட்ண, இந்த உத்தரவை தபால் நிலைய அதிபர்களுக்கு பிறப்பித்துள்ளார்.

வெளி இடங்களில் இருந்து பொதி செய்யப்பட்டு தபாலில் சேர்ப்பதற்காக பொதிகளை சமர்ப்பிக்க வேண்டாம்.

இதற்கமைவாக வெளி இடங்களிலிருந்து பொதி செய்யப்பட்டு எடுத்து வரும் பொதிகளை ஏற்றுக்கொள்வதை கருமபீட அதிகாரிகள் நிராகரித்தல் அல்லது பொதிகளை திறந்து காட்டி மீண்டும் பொதியிடுமாறு பொது மக்களுக்கு தபால் அலுவலகங்களில் ஆலோசனை வழங்கப்படக்கூடும்.

இதனால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிர்த்துக் கொள்வதற்காக அனைத்துப் பொதிகளையும் தபால் அலுவலகங்களில் பொதியிட்டு கையளிக்குமாறு பொது மக்களிடம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.