அரசாங்க அச்சக திணைக்களம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழிருந்த அரசாங்க அச்சக திணைக்களம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த விடயம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி, வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து, பொதுநிர்வாக அமைச்சின் கீழ் காணப்பட்ட அரசாங்க அச்சக திணைக்களத்தின் பொறுப்புகள், அமைச்சரவை மாற்றத்தை அடுத்து, ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வர்த்தமானிப்படுத்தட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னர் ஊடக அமைச்சின் கீழ் அரசாங்க அச்சக திணைக்களம் காணப்பட்டதோடு, கயந்த கருணாதிலக்க அவ்வமைச்சுக்கு பொறுப்பாக இருந்தார்.

அதற்கமைய தற்போது கயந்த கருணாதிலக்க வகிக்கும், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ், அரசாங்க அச்சக திணைக்களம் கொண்டு வரப்பட்டுள்ளது.