இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நியமனம்

0
347

மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த இணைத்தலைமைப் பதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கானதும், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கானதும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கானதும் என மூன்று இணைப்புக்குழுக்களின் இணைத் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த மாதம் அவருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் என்ற நியமனததிற்கு மேலதிகமாக இந்த இணைத் தலைமைப் பொறுப்பு தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.