மட்டக்களப்பில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் வந்த இருவர் கைது

மட்டக்களப்பிற்கு  வியாபாரத்திற்காக கொண்டுவரப்பட்ட  இரண்டு கிலோ கேரளா கஞ்சா  அதனை கொண்டு வந்த இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகலில் இருந்து மட்டக்களப்பிற்கு  வியாபாரத்திற்காக கொண்டுவரப்பட்ட  இரண்டு கிலோ கேரளா கஞ்சா மற்றும் கொண்டு வரப்பட்ட வாகனம் , எடுத்து வந்த நபர்கள் இருவரையும்  மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்   பகுதியில் வைத்து நேற்று  மாலை மட்டக்களப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர்

கைது செய்யப்பட இருவரிடம் இருந்து   இரண்டு கிலோ கேரளா கஞ்சாவும் ,இரண்டு கையடக்க தொலைபேசிகளும் மற்றும் அவர்கள் வந்த வாகனத்தையும்  மீட்கப்பட்டதாக  மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிசாருக்கு  கிடைத்த இரகசிய தகவல்  அமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி.  வி.எஸ்.பி. பண்டார  தலைமையிலான பொலிஸ்  கொஸ்தாப்பலான  ஆர். பரமானந்தான் , கலீல் , தவரூபன் , ஆஷிக் , கோமால் , மௌரூப் ,  ஜெமில் கொண்ட குழுவினர் சம்பவ தினமான  நேற்று மாலை  மட்டக்களப்பு – கொழும்பு வீதியின்  சத்துக்கொண்டான் பகுதியில்   கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்  .

இந் நிலையில் குறித்த வாகனத்தை  கண்ட பொலிசாரினால் நிறுத்தப்பட்டு  .வாகனத்தை சோதனையிட்ட போது மறைத்து  எடுத்து வந்த . 1 kg 879..500 g எடை கொண்ட கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து இருவரை கைது செய்துள்ளதுடன் . இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர்  .

இதனையடுத்து அவர்கள வந்த  வாகனம்  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு   மோப்ப நாய் கொண்டு சோதனை  செய்தபோது   வாகனத்தின்  இருக்கைக்கு கீழே இருந்து 500mg  மாதிரி கஞ்சா பக்கட்  ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்டவர்கள். குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தை  சேர்ந்த 38 , 30 வயதுடையவர்கள் எனவும் . இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா யாழ்ப்பாணத்திலிருந்து  ஒருவர் கொண்டு வந்து விற்றதாகவும். அதனை மட்டக்களப்பு பகுதியில் வியாபாரி ஒருவருக்கு விற்பதற்காக எடுத்து வந்ததாகவும் . பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது .

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் படுத்துவதற்கான  நடவடிக்கையினை  மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகள .மட்டக்களப்பு தலைமையக பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்