ஆரம்பத்தில் இனிக்கும் ஒருகட்டத்தில் வெறுக்கும் – சி.சிறிதரன்

0
556

ஆரம்பத்தில் இனிக்கும் பின்னர் கசக்கும், புளிக்கும், ஒருகட்டத்தில் வெறுக்கும் ஆனாலும் பொறுமையுடன் இருந்து நிகழ்வு நிறைவுபெற்றதன் பின்புதான் பாடசாலை அதிபர்கள் செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் குறிப்பிட்டார்.

கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தின் சிறுவர் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று(04) வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் கோ.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற போதே இதனைக் கூறினார்.
வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பாடசாலையின் நிகழ்வொன்றிற்கு அழைப்புவிடுத்தால், எந்த நிகழ்வென்றாலும் இனிவரும் காலங்களில் பாடசாலைகளின் அதிபர்கள் ஆரம்பமுதல் இறுதிவரை இருந்து ரசிக்க வேண்டும். இருக்கும்போது, ஆரம்பத்தில் இனிக்கும் பின்னர் கசக்கும், புளிக்கும், ஒருகட்டத்தில் வெறுக்கும் ஆனாலும் பொறுமையுடன் இருந்து நிகழ்வு நிறைவுபெற்றதன் பின்புதான் செல்ல வேண்டும் இதனை எதிர்வரும் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

ஒலிம்பிக் தீபம் ஏற்றலுடன் ஆரம்பித்த விளையாட்டு நிகழ்வில், 256மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

குறித்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில், போத்தலில் நீர்நிரப்புதல், நின்றுபாய்தல், முழுங்கால் ஊன்றி எறிதல், தடை தாண்டுதல், தாங்குதிறன் ஓட்டம் என பல விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன், அணிநடைமரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, வினோதஉடை போன்றனவும் இடம்பெற்றன. மேலும் போட்டிகளில் பங்கேற்றிருந்த 256மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வலய உயர் உத்தியோகத்தர்களும், செயலக உத்தியோகத்தர்களும், அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.