கட்டுத்துவக்கு வெடித்தில் ஒருவர் பரிதாப மரணம்

0
302

மட்டக்களப்பு கரடியனாறு காட்டுப்பகுதிக்கு வேட்டையாட சென்ற நபரின் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததமையால்  பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

மொறகொட்டாஞ்சேனை பாடசாலை முன் வீதியை சேர்ந்த 25 வயதுடைய கருணாகரன் என்பவரே நேற்று மாலை வேட்டையாட சென்றுள்ளார்.

வேட்டையாட சென்ற காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்தமையால்  பலத்த காயமடைந்து மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்த நபரின் சடலம் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில்  வைக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம்  குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.