கொல்லநுலையில் காகித விழா

0
401

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கொல்லநுலை அறநெறிப்பாடசாலையின் காகித விழா  ஞாயிற்றுக்கிழமை(31) கொல்லநுலை பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது, பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதனை தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்வுகளும் அரங்கில் நடைபெற்றன. மேலும், காகிதவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மா.அகிலேஸ்வரன் மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.