போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வர்த்தமானி வெளியீடு

சாரதி அனுமதிப்  பத்திரம் இல்லாமை மற்றும் போதையில் வாகனம் செலுத்துதல் உட்பட 7 போக்குவரத்து விதிமீறல்களுக்கு குறைந்தபட்ச  தண்டப்பணத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில் பாதையினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல் புதிய போக்குவரத்து குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வயதெல்லைக்கும் குறைவானவர்கள் வாகனம் செலுத்துதல் , பாதுகாப்பின்றி மற்றும் ஆபத்தான வகையில் அதிக வேகத்தில் வாகனைத்தை செலுத்துதல், தொலைபேசிளை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து குற்றங்களுக்கான அபராத் தொகையை எதிர்காலத்தில் அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தமானியில்  வெளியிடப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றங்களாவன,

  • ரயில் பாதையினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல்.
  • செல்லுபடியாகும் வாகன காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தல்.
  • அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்.
  • சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவர்களை வாகன சாரதியாக அமர்த்துதல்.
  • செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல்.
  • மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல்.
  • வீதியில் இடது பக்கமாக முந்திச் செல்லுதல்.

ஆகிய போக்குவரத்து குற்றங்களுக்கான  அபராதத் தொகையை  25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.