கிழக்குப்பல்கலைக்கழக முன்னாள் மாணவி மரணம் .10ம்திகதி திருமணம் நடக்க இருந்த நிலையில் மன்னாரில் துயரச்சம்பவம்.

0
1167

மன்னாரில் நேற்று துயரம்..

10 ஆம் திகதி திருமணம். மணமகள் நேற்று மரணம். மன்னாரில் நடந்த துயரம்.

மன்னார் தட்சணாமருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாயபிள்ளை ஹேமா (வயது 28 ) எனபவரே உயிரிழந்தவராவார்.

இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி திருமணபந்தத்தில் இணையவிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இந்நிலையில் தலையில் ஏற்பட்ட கடுமையான வலியைத்தொடர்ந்து மயக்கமடைந்த இவரை மன்னார் வைத்தியசாலைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தலையில் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டறிந்த வைத்தியர்கள் நேற்று முன்தினம் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டனர். அதையடுத்து அவர் கோமா நிலைக்கு சென்றார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் நேற்று பிற்பகல் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்தது.

இவர் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கல்வி பயின்று கடந்த வருடம் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.