பரீட்சை பெறுபேறு மாணவர்களே பெற்றோர்களேஇதையும் வாசியுங்கள்

0
421
பரீட்சையில் வெற்றிபெறாத மாணவர்களில் ஒரு கலைஞன் இருப்பான்-அவனுக்கு கணிதம் தேவைப்படாது;

அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்-அவனுக்கு வரலாறும் இலக்கியமும் முக்கியமல்லை;
ஒரு விளையாட்டு வீரனிருப்பான்-அவனுக்கு உடல்நலனே முக்கியமன்றி பௌதீகவியல் புள்ளியன்று.
பரீட்சையில் அதிக புள்ளிகள் எடுத்தால் சிறந்த பிள்ளை, எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவனென்று தயவுசெய்து அவர்களது தன்னம்பிக்கையை ஒருபோதும் பறித்துவிடாதீர்கள்.
அவர்களுக்கு சொல்லுங்கள் இது ஒரு வெறும் பரீட்சை மட்டுமே, வாழ்க்கையில் வெற்றிகொள்ள இதைவிடப் பெரிய சவால்கள் நிறையவே உள்ளன என்று.
“உன்மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் புள்ளியை வைத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை, என்றும் நீ என் பிள்ளை, என் உயிர்” இப்படி சொல்லிப்பாருங்கள் பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒருநாள் உலகையே வெல்வான்.
வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்துவிடக் கூடாது.
மருத்துவர்களும், பொறியியலாளர்களும் மட்டுமே உயர்ந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என நினைத்துவிடாதீர்கள்.
உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.

-பார்த்ததில் பிடித்தது. இன்றைய நாளுக்கு பொருத்தமானது.jm