மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வரலாற்றயையே மாற்றியமைந்த ஓ.எல் பெறுபேறு

வெளியாகியுள்ள 2018ம் ஆண்டிற்கான கல்விப்பொதுத்தராதர சாதாரதரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய இரண்டு மாணவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்று வலய வரலாற்றையே மாற்றியமைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, 9ஏ சித்திகள் பெறப்படாது, 8ஏ, வீ சித்திகளே அதிக சித்தியாக பெறப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பெறுபேற்றின் அடிப்படையில், கன்னன்குடா மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் 9ஏ சித்திகளைப்பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இச்சாதனையை, கன்னன்குடா மகாவித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற, பிரபாகரன் அபிரக்சனா, மோனன்தாஸ் டிலோச்சனா ஆகிய மாணவர்களே சாதித்துள்ளமை குறிப்பிடக்கது.

கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை முழுமையாக உள்ளடக்கிய இவ்வலயம், ஆசிரியர் பற்றாக்குறையுடனும், ஏனைய வளப்பற்றாக்குறைகளுடனும் இயங்கிய நிலையிலும், மாணவர்களின் முயற்சி, ஆசிரியர்களின் கற்பித்தல்நுட்பம், அதிபர்களின் முகாமைத்துவம், ஆசிரியஆலோசகர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப்பணிப்பாளர்களின் வழிகாட்டல், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேடசெயற்றிட்டம், கண்காணிப்பு, ஆலோசனை வழிகாட்டல் போன்ற செயற்பாடுகளின் மூலமாக இவ்வலயத்தில் இவ்வாறான சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், 2017ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் இறுதி வலயமாகவிருந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு 93வது இடத்தினைப்பெற்றிருந்தமையும் எடுத்துக்காட்டத்தக்கது.