வைத்திய துறை சார்ந்த அனைவருக்கும் சிறந்த சுகாதார கல்வியினை வழங்குவதன் ஊடாகவே நோயாளிக்கு சிறந்த வைத்தியத்தினை வழங்க முடியும்

வைத்திய துறை சார்ந்த அனைவருக்கும் சிறந்த சுகாதார கல்வியினை வழங்குவதன் ஊடாகவே நோயாளிக்கு சிறந்த வைத்தியத்தினை  வழங்க முடியும்  அதுவே எமது நோக்கமாகும் என மட்டக்களப்பு வைத்திய சங்கத் தலைவர் சத்திரகிச்சை நிபுணர் ஏச்.ஆர்.தம்பவிற்ர அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்திய சங்கத்தின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சு, தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு, ஆசரி வைத்திய பிரிவு ஆகியன இணைந்து, நடாத்திய நோய் வரும் முன் தடுப்பும் பாதுகாப்பும் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கொன்று மட்டக்களப்பு ஈஸ்ற் லகுண் ஹோட்டலில்   நடைபெற்றது மட்டக்களப்பு,கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலையினை சேர்ந்த  தாதியர்கள்,மருந்தகர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டதுடன் இக்கருத்தரங்கின் விரிவுரையாளராக கொழும்பு ஆசறி வைத்தியசாலையின் புற்றுயல் நோய்க்கு பொறுப்பான புற்றியல் வைத்திய நிபுணர் சாமா குணதிலக அவர்கள் கலந்து கொண்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் வைத்திய சங்கத்தலைவர்
மட்டக்களப்பு வைத்திய சங்கமானது 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்தாலும் கூட இன்றை வரைக்கும் சுகாதார கல்வி தொடர்பில் வைத்தியர்களைத் தவிர சுகாதார துறைசார்ந்த ஏனையோருக்கு தங்களது பணிகளை முன்னெடுத்ததில்லை. ஆனால் நாங்கள் தற்பொழுது காலத்தின் நன்மை கருதி தற்பொழுது சுகாதார துறைசார்ந்த அனைவருக்கும் சுகாதார கல்வியினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு வைத்திய சங்கத்தினராகிய நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். அதன் ஒரு கட்டமாகவே கல்முனை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்டபட்ட வைத்தியசாலைகளைச் சேர்ந்த தாதியர்கள், மருந்தகர்கள், ஆகியோரை தேர்ந்தெடுத்து இந்த கருத்தரங்கினை நடாத்துகின்றோம்.
வைத்திய சங்கத்தினராகிய நாங்கள்  புதிய திட்டங்களை தயாரித்து வருகின்றோம் அவை முடிவுற்றதும் சுகாதார துறைசார்ந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான தேவையான சுகாதார கல்வியினை நாங்கள் வழங்க இருக்கின்றோம். வைத்தியர்களுக்கு மாத்திரம் சுகாதார கல்வியை வழங்குவதன் ஊடாக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிக்கு சிறந்த வைத்தியத்தினை வழங்க முடியாது ஆகவேதான் சுகாதார துறைசாரந்த அனைவருக்கும். இது தொடர்பில் விழப்பூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதன் பிற்பாடு பொது மக்களுக்கும் சுகாதார கல்வியினை முன்னெடுப்பதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம்.
வைத்தியசாலைக்கு வருகின்ற எந்த நோயாளியும் சிறந்த சிகிச்சையை பெறாமல் வைத்தியசாலையை விட்டு திரும்பக்கூடாது என்பதாக நோயாளியை மையப்படுத்தியதாகவே எமது அனைத்து நடவடிக்கைகளும் அமைய இருக்கின்றது. இவ் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொதுமக்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இது போன்று ஊடகமும் எமக்கு சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி எமது செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்து வெற்றி பெறுவதற்கு துணைநிற்க  வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவர் இதன் போது தெரிவித்தார்……பழுகாமம் நிருபர்