தனிநபர் மீதான வரி 11,000 ரூபாவினால் அதிகரிப்பு – ஜே.வி.பி.

வரவு செலவுத் திட்டத்தினூடாக தனி நபர் மீதான வரி 11,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் செலவை ஈடுசெய்ய மேலும் இரண்டு இலட்சம் கோடி கடன் பெறவேண்டும். இதன் மூலம் அரசாங்கம் மக்கள் மீது மேலும் வரிச்சுமையை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி உறப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

 

அத்துடன் கடந்த ராஜபக்ஷ் அரசாங்கம் கடனிலேயே பொருளாதாரத்தை கொண்டு சென்றதாகவும் அதனை மாற்றியமைப்பதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை பார்க்கும்போது இந்த அரசாங்கமும் அவ்வாறே கடனில் செல்கின்றது என்பது தெளிவாகின்றது.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.