“உயிரைப் பணயம் வைத்து உன்னதசேவை வழங்குவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கள்”

(க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாணத்தில் அமைய,தற்காலிக அடிப்படையில் கடமையாற்றிய 66 தீயணைப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

“உயிரைப் பணயம் வைத்து உன்னதசேவை வழங்குவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கள்” எனும் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் திட்டத்தின் மூலம் கடந்த காலங்களில்  தீயணைப்பு படைகளில் கடமையாற்றிய 66பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் சனிக்கிழமை(9)பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது.

நிரந்தர நியமனம் வழங்கி வைக்கும்  நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  நியமனங்களை வழங்கி வைத்தார்.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன்,கிழக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் எஸ்.சிவராசா,இணைப்புச் செயலாளர் எம்.றுஸ்வின்,கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலகத்தின் மாகாண திட்டப்பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,கல்முனை மாநகரசபை முதல்வரும்,சட்டத்தரணியுமான ரக்கீப், அக்கரைப்பற்று மாநகரசபை முதல்வர் அகமட் ஸக்கி அதாவுல்லா,மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன்,கல்முனை மாநகரசபை ஆணையாளர் எம்.சீ.அன்சார்,மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் கே.சித்திரவேல்,பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள்,தீயணைப்பாளர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

திருகோணமலை நகரசபை,மட்டக்களப்பு மாநகரசபை,கல்முனை மாநகரசபை,அம்பாறை நகரசபை,அக்கரைப்பற்று மாநகரசபை போன்ற உள்ளுராட்சி மறங்களில்  கடமையாற்றியவர்களுக்கே இவ்வாறு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.