மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

0
351

மட்டக்களப்பு முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமினை அகற்றி முகாமினுள் உள்ள பாடசாலை கட்டடத்தை விடுவித்து தருமாறும் மக்கள் போக்குவரத்திற்குரிய வீதியினை திறந்து தருமாறு கோரியும் பிரதேச மக்களினால் இன்று வெள்ளிக்கிழமை (8)காலை இராணுவ முகாமிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 

முறக்கொட்டான் சேனை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன்  கோறளைப்பற்று பிரதேச சபை உப்பினர்களான க.கமலேஸ்வரன்,கு.குணசேகரம்,சு.சுதர்ஷன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில்  இராணுவ முகாமிற்கு முன்பாக கூடிய  பொதுமக்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்திய வாறு கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘எமது காணி எமக்கு வேண்டும், “இராணுவமே வெளியேறு, “பாடசாலை காணியை உடன் விடுவி, “நாம் மரத்தடியிலும் தகரத்தடியிலும் கல்வி கற்பதா, “கௌரவ பிரதமரே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை, “ஜனாதிபதி அவர்களே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை போன்ற வசனங்கள் உள் அடங்கிய பதாதைகளை  ஏந்தி இருந்தனர்.

 

குறித்த போராட்டத்தின் முடிவின்போது ஜனாதிபதிக்கும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் அரசாங்க அதிபருக்கும் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரனிடம் பொதுமக்களின் பிரதிநிதிகள் கையளித்தனர்.

 

குறித்த இராணுவ முகாமானது 1990ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து முறக்கொட்டான்சேனை இராம கிருஸ்ண மிஷன் பாடசாலை அமைத்த காணிக்குள் இயங்கிவருகின்றது.

குறித்த இராணுவ முகாமிற்குள் பாடசாலை கட்டடம் உட்பட 52 குடியிருப்பாளரின் காணிகள் உள்ளது.சுமார் 11 ஏக்கர் அளவு கொண்டது.

யுத்தம் முடிவடைந்து 10வருட காலம் ஆகின்ற நிலையில் இன்னும் குறித்த பாடசாலை இராணுவத்தினரால் விடுவிக்கப்படவில்லை.

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம் அமைந்துள்ள பாடசாலைக் கட்டடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்.ஆனால் இதுவரையும் குறித்த முகாம் விடுவிக்கப்படவில்லை.

எனவே பாடசாலை மாணவர்களின் கட்டடப் பற்றாக் குறையினை கவனத்தில் கொண்டு விரைவாக பாடசாலை கட்டடத்தினை விடுவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தேவபுரம்,களுவன்கேணி கிராமங்களுக்கான பிரதான வீதியினையும் திறந்துதர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினை கேட்டுக்கொள்வதாக அம்மகஜரில் பிரதேச பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11.03.2019 ஆம் திகதி ஜானதிபதியினை சந்தித்து இதற்கான தீர்வினை பெற்று தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன்  தெரிவித்தார். இவ் இராணுவ முகம் வேறு இடத்திற்கு செல்வதற்கான அடிப்படைத் தேவைகளை ஜனாதிபதி தமது நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்து தருவதாக குறிப்பட்டிருந்தார், இருந்தபோதிலும் ஏன் இன்னும் குறித்த இராணுவ முகாம் விடுவிக்கப்படவில்லையென சந்தேகம் ஏற்படுகின்றது, இதில் ஏதும் அரசியல் பின்னணி உள்ளதா என்ற சந்தேகமும் தனக்கு ஏற்பட்டுள்ளதாக