முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு 2020இல் 6ஆயிரம் ரூபாவாகும்.

0
392

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு 2020இல் 6ஆயிரம் ரூபாவாகும்.
புதிய காப்புறுதி திட்டம் ஒன்றையும்  அறிமுகப்படுத்தவிருக்கின்றோம்.!
‘திறமையான பெண் அழகான உலகை படைக்கின்றாள்’
கல்முனை மகளிர்தினவிழாவில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி !

(காரைதீவு  நிருபர் சகா)

கிழக்கு மாகாணத்தினால் தற்போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு
வழங்கப்படுகின்ற 3ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை 4ஆயிரம் ரூபாவாக
உயர்த்தியுள்ளோம். 2020ம் ஆண்டு 6000.00 ரூபாவாக அதிகரிக்க
எண்ணியுள்ளோம். மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்காக புதிய  காப்புறுதித்
திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன் ஊடாக சிறந்த முன்பள்ளி
கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க முடியும் என நாம் நம்புகின்றேன்.

இவ்வாறு கல்முனையில் நடைபெற்ற 108வது சர்வதேச மகளிர்தினவிழாவில் பிரதம
அதிதியாக கலந்துகொண்டுரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற
உறுப்பினர் ஸ்ரீயானி விஜயவிக்கிரம தெரிவித்தார்.

மனித அபிவிருத்தி தாபனம் தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம் பெண்கள்
ஒத்துழைப்பு முன்னணி வேள்வி பெண்கள் அமைப்பு ஆகிய இணைந்து நடாத்திய
சர்வதேச மகளிர்தினவிழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

இவ்விழா கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் இன்று (8) மனித அபிவிருத்தி
தாபனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளரும், வேள்வி பெண்கள் அமைப்பின்
தேசிய தலைவியுமான திருமதி.பி.லோகேஸ்வரி  தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வட மாகாண சபை முன்னாள் அமைச்சர்  அனந்தி சசிதரன்   காரைதீவு
பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில்  மேலும் அரச மற்றும் அரசசார்பற்ற
நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இளைஞர் கழக உறுப்பினர்கள் உட்பட  சுமார்
800 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி
விஜயவிக்கிரம மேலும் உரையாற்றுகையில் :

சர்வதேச மகளிர் தினத்தினை ஒட்டி இம்முறை இலங்கையில் ‘திறமையான பெண் அழகான
உலகை படைக்கின்றாள்’ என்ற தொனிப்பொருளில் இடம் பெறவுள்ளது.

திறமையான பெண் என்கின்ற போது நாம் பெண்களாகிய நாம் அரசியல்வாதியாக
உள்வாங்கும் போது எமது திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். நானொரு
பெண்ணாக நாடாளுமன்றத்திற்குள்ளேயும் சரி, வெளியேயும் சரி எனது
படிப்புத்தான் என்னை இந்த அளவிற்கு துணிச்சலாக செயற்பட வைத்துள்ளது.

நான் ஒரு சட்டத்தரணி என்றதன் அடிப்படையில் பல சவால்களை மிக தைரியமாக
எதிர்கொண்டுள்ளேன். எனவே உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள நீங்கள் ஊடகங்கள்
ஊடாக புத்தகங்கள் ஊடாக, ஏனைய துறைகளில் உங்களுடைய அனுபவங்களை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.

அவ்வாறு என்றால் மட்டுமே பெண் அரசியல்வாதிகளுக்கு உரியஇடம் கிடைக்கும் .
அப்பொழுதுதான்  நாம் அழகான உலகை படைக்க முடியும். எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்:

முன்பள்ளி ஆசிரியர்களுக்காக நீங்கள் உள்ளுராட்சி மன்றங்களில் குரல்
கொடுப்பதை நான் பெருமையாக பார்க்கின்றேன். முன்பள்ளி ஆசிரியர்கள்
அனைவரும் பெண்களாகவே காணப்படுகின்றார்கள். அவர்களுக்கு பெண்களாகிய
நாங்கள் அரசியல் ரீதியில் அவ்வாறான குரல்களை எழுப்பி அவர்களுக்கு
நிவாரணங்களை தேடிக்கொடுப்பது எமது கடமையாகும்.

தற்பொழுது கிழக்கு மாகாணத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு
வழங்கப்படுகின்ற 3000.00 ரூபாய் கொடுப்பனவை 4000.00 ரூபாயாக
உயர்த்தியுள்ளோம். 2020ம் ஆண்டு 6000.00 ரூபாயாக அதிகரிக்க
எண்ணியுள்ளோம்.

மேலும் முன்பள்ளி ஆசிரியர்களின் நலன்கருதி காப்புறுதி திட்டம் ஒன்றை
அறிமுகப்படுத்தள்ளோம். இதன் ஊடாக சிறந்த முன்பள்ளி கட்டமைப்பு ஒன்றினை
உருவாக்க முடியும் என நாம் நம்புகின்றேன் . என்றார்.

மேலும் இங்கு உரையாற்றுகையில் மனித அபிவிருத்தி தாபனத்தில் கடந்த
சுனாமியின் பின்னரான செயற்பாடுகளில் பல இலக்குகளை அடைந்திருக்கின்றார்கள்
என்பது இந்நிகழ்ச்சி குறிகாட்டியாகவுள்ளது.

மனித அபிவிருத்தி தாபனம் வேள்வி என்ற பெண்கள் அமைப்பை உருவாக்கி அதன்
தலைமைத்துவங்களை பெண்களுக்கே வழங்கி பெண்களே நிர்வகிக்கப்பட்டு
செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி தற்பொழுது அப்பெண்களே திட்டம் தீட்டும்
இடங்களில் இருந்து கொண்டு பெண்களுக்காக குரல் கொடுப்பது என்பது முக்கிய
விடயமாக காணப்படுகின்றது.
உங்களுடைய அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளிலும் என்னுடைய இயன்ற அளவில்
தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளேன் எனத் தெரிவித்தார்.