சிறுபான்மையினருக்குள்ள ஒரேபலம் ஜனாதிபதிமுறைமை! நூல்வெளியீட்டுவிழாவில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா!

0
436
இந்த நாட்டில் சிறுபான்மையினருக்குள்ள ஒரே பலம் ஜனாதிபதிமுறைமை ஒன்றுதான். அதனை இல்லாதொழிக்க பலர் முயற்சிக்கிறார்கள். சிறுபான்மையினரை அடக்கிஒடுக்குவதே அதற்கான காரணமாகும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும் தேசியகாங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் எ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
நாடறிந்த எழுத்தாளர் இலக்கியமாமணி மர்ஹூம் அ.ஸ.அப்துஸ்ஸமது நினைவாக அவரின் புதல்வன் அ.ஸ.அகமட்கியாஸ் எழுதிய ‘எல்லாப் பூக்களுமே அழகுதான் ‘ என்ற வாழ்வியலுக்கான அறிவியல்சிந்தனை நூலின் வெளியீட்டுவிழாவில்  பிரதமஅதிதியாககலந்துகொண்டு உரையாற்றுகையில்  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மணிப்புலவர் மருதுர் எ மஜீட் தலைமையில் நடைபெற்ற  இந்நூல்வெளியீட்டுவிழா நேற்று 2ஆம் திகதி சனிக்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது.
விசேடஅதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழகத் தமிழத்துறைப்பேராசிரியர் றமீஸ்அப்துல் பேராசிரியர் எ.எம்.முஸாதிக் கிழக்குபல்கலைக்கழகசிரேஸ்ட்ட விரிவுரையாளர் றூபிவலன்ரீனா பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
விழாவில் ‘ஆ.ஸா. இலக்கியமாமணி விருதுப்பட்டம்’ வழங்கும் விருதுப்பட்டய தொடர்நிகழ்வின் முதல் விருதை பொன்விழாக்கண்ட கவிஞர் அன்புடீன் பெற்றதோடு ‘கவி ஒலி’ என்ற பட்டத்தை முன்னாள் அமைச்சர் அதாவுல்லா வழங்கிவைத்தார்.
வெளியீட்டுரையை கவிஞர் பாலமுனைபாறுக் ஆய்வுரையை பேராசிரியர் றமீஸ்அப்துல்லா நயவுரையை றூபிவலன்ரீனாபிரான்சிஸ் வாழ்த்துரைகளை வயலக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் கவிஞர் எஸ்.றபீக் ஆகியோர் வழங்கினார்கள். கவிஞர் அவ்பர் முஸ்தபா கவிமழைபொழிந்தார்.
நிகழ்ச்சித்தொகுப்பை வானொலிஅறிவிப்பாளர் எ.எம்.அன்வர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் நிகழ்த்தினர்.
சம்மாந்துறை ஸ்ரீகோரக்கர் தமிழ் மகாவித்தியாலய மாணவிகளின் செம்மொழி நடனம் இடம்பெற்றது. நடனஆசிரியை சௌமியாவின் தயாரிப்பிலுருவான அந்த நடனம் பலரையும் கவர்ந்தது.
அங்கு முன்ளான் அமைச்சர் அதாவுல்லா மேலும் பேசுகையில்;
இஸ்லாமிய தமிழிலக்கியத்தை இலக்கியப்பரப்பினில் அறிமுகப்படுத்திய பெருமை இந்த மண்ணின் பெருமகன் அ.ஸ.அப்துல்சமது என்ற இலக்கிய ஆளுமைக்கேசாரும். உலகில் எத்தனையோபேரது பேச்சுக்களைக்ககேட்டிருக்கிறேன். ஆனால் அவரது பேச்சு மட்டும்தான் எனக்குப்பிடிக்கும். அவரிடம் நான் தமிழ்சமயம் படித்திருக்கிறேன். அவரது முன்வைப்பென்பது அலாதியானது.
அப்படிப்பட்ட ஆளுமையின் மகன் கியாஸ் ஒரு சிறந்த கல்விநிருவாகி. அதற்கப்பால் அவரிடம் பொதிந்திருக்கின்ற நல்லபண்புகள் இலக்கியஆளுமைகள் இன்று 2வது நூலை சிறப்பாக வெளியிட்டுவைக்கவைத்திருக்கிறது. ஆசிரியருக்கு மாணவருக்கு பெற்றோருக்கு சமுகத்திற்கு உதவும் நல்லதொரு துணைநூலாகும். இந்தநூலை 500பேர் வாசிப்பதைவிட ஓடீயோ வடிவில் வெளியிட்டால் பல்லாயிரக்கணக்கான மக்களைச்சென்றடையும்.
உலகின் மூத்தமொழியான தமிழைப்பேசுகின்றவர்களில் முஸ்லிம்கள் முதன்மையானவர்கள்.முதன்முதலில் ஆதம்அலைகுவசலாம் பேசியதும் தமிழ்தானா என்ற ஆய்வும் தொடர்கிறது.
சிவனொளிபாதமலையை அனைத்துமதத்தினரும் மதிக்கிறார்கள். ஆனால் அந்தமலை யாருக்குச்சொந்தம் என்று கேட்டால் அனைவருக்கும்தான் எனப்பதில்வரும்.இப்படிப்பல.  இவைதான் உலகம் இலங்கையை திரும்பிப்பார்க்கவைத்த அம்சமெனலாம்.
நாம் ஜனநாயகத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால் கிடைத்த சுதந்திரத்தை இழந்துகொண்டிருக்கிறோம் என்ற உண்மையைப்பலரும் அறியத்தவறியுள்ளனர்.
எமக்கான சுதந்திரத்தை மீளப்பெறுவதற்கு இன்று ஜனநாயகம் பேசுகின்றனர். விழிப்பாகவிருக்கவேண்டும் என்றார்.
இறுதியாக நூலாசிரியர் அஹமட்கியாஸ் ஏற்புரை வழங்கினாh