திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் சிவலிங்கம் உடைப்பு.

பொன்.ஆனந்தம்

 

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் இன்று காலையில் இருந்து  பதற்ற நிலமை ஏற்பட்டது.

சிவராத்திரியை முன்னிட்டு ஆலய சூழல் மற்றும் வீதிகள் சோடைனைசெய்யும் பணிகளில் ஆலய நிர்வாகமும் தொண்டர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

 இவ்வாறான நிலையில் நேற்றிரவு அன்னதான மடத்திற்கு முன்னர் ஆலமரத்தின்கீழ் வைக்கப்பட்ட சிவலிங்கம் இன்று காலை இனம்தெரியாத சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்தே இங்கு  பதற்றநிலமை  எற்பட்டதுஎன பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 குறித்த இடத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து யுத்தின் பின்னர் அடாத்தாக கடைகளை வைத்துள்ள பெரும்பான்மையின வியாபாரிகளே அங்குநிலையாக தங்கியுள்ளனர்;. 

படையினரின் பாதுகாப்பு நிலமை அதிகமான இந்த சூழலில் இவ்லிங்கத்தை யார் உடைத்தது

என்பதே பொதுமக்களின்கேள்வியாக வுள்ளன. அன்தான மடத்திற்கும் ஆலயத்திற்குமிடையில் 54 கடைகள் அடாத்தாக  2007 அரசியல்  செல்வாக்குடன் வைத்துள்ளனர்.இது ஆலய வழிபாட்டிற்குரிய மக்கள் நடமாடும் பிரதேச மாகும்.

 இதனை அகற்றவேண்டும் என பல்வேறு கோரிக்கைள் உள்நாட்டிலும்,  ஐநாவரையும்  சென்ற நிலையில் இதுதொடர்பாக  மாவட்ட செயலகத்தில்  கூட்டங்கள் அண்மையில் நடாத்தப்பட்டது .

குறித்த கடைகள் அகற்றப்படவேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை விரும்பாதவர்கள் இவ்வாறான நாசகார வேலையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது  எனினும் மேலதிக நடவடிக்கைளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.