ஆசிரிய ஆலோசகர்களின் பணிப்பகிஸ்கரிப்புப்போராட்டம் தொடர்கிறது!

0
396

ஆசிரிய ஆலோசகர்களின் பணிப்பகிஸ்கரிப்புப்போராட்டம் தொடர்கிறது!
இலங்கை ஆசிரியஆலோசகர் சேவையை உடனடியாக அமுலுக்குக்கொண்டுவரவேண்டுமாம்!
(காரைதீவு  நிருபர் சகா)

நாடளாவியரீதியில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின்
பணிப்பகிஸ்கரிப்புப்போராட்டம் (22) வெள்ளிக்கிழமை இரண்டாவது
நாளாகத் தொடர்ந்தது.

இலங்கை சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்கள் சங்கம் இதற்கான ஏற்பாட்டைச்செய்துள்ளது.

நாடளாவியரீதியில் வியாழனன்று(21) அனைத்து ஆசிரியஆலோசகர்களும்
சுகயீனலீவில் நின்றனர். (22) வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச்சென்று
பணிப்பகிஸ்கரிப்பிலீடுபட்டனர். தமக்கான நிரந்தர சேவை வரும்வரைதொடர்ந்து
போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் வலயமட்டச்செயற்பாடுகள் பாடசாலை மேற்பார்வைகள் போட்டி நிகழ்ச்சிகள்
பி.எஸ்.ஜ.தரிசிப்பு குழுத்தரிசிப்பு வெளிவாரி மேற்பார்வை அனைத்தும்
செயலிழந்துள்ளன.
தமக்கான நிரந்தரமாக  இலங்கை ஆசிரியர்ஆலோசகர் சேவையை மேலும் தாமதிக்காமல்
உடனடியாக அமுலுக்குகொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே
இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

சம்மாந்துறை வலய ஆசிரியர் ஆலேசர்களின் கூட்டம் (22) சம்மாந்துறை
அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் ஆசிரியஆலோசகர் சங்கப்பிரதிநிதி
எம்.ஜ.ஹஜ்ஜி மொகமட் மௌலவி தலைமையில் நடைபெற்றது.

சுமார் 20 ஆசிரியஆலோசகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட
தீர்மானங்கள் வருமாறு :
கீழ்வரும் நடைமுறைகளை தமக்கான தீர்வு கிட்டும்வரை தொடர்ந்து
கடைப்பிடிப்பது என்று தீர்மானமாகியது.
1.    வலய மற்றும் கோட்ட மட்ட சகல திட்டமிடல் செய்றபாடுகளிலிருந்தும் விலகல்.
2.    வலயகோட்ட மட்ட அனைத்து மேற்பார்வை நடவடிக்கைகளிலும் பங்குபற்றுவதில்லை
குறித்த பாடசாலைக்கு அன்று செல்வதில்லை
3.    அனைத்து பாடங்கள் தொடர்பான இணைப்பாடவிதான செயற்பாடுகள் போட்டிகள்
நடாத்துதல் மத்தியஸ்தம் வகித்தல் என்பனவற்றிலிருந்து விலகல்.
4.    பாடசாலைநேர அட்டவணைப்பரிசீலனை நிதிஅறிக்கை பார்வையிடல் உள்ளிட்ட சகல
டொமைன் பார்வைகளைத்தவிர்த்தல்.
5.    பாடசாலை அபிவிருத்திச்சங்க கூட்டங்கள் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள்
என்பனவற்றிலிருந்து விலகியிருத்தல்.
6.    பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்கான பாடசாலை வேலைகளை தவிர்த்தல்.
7.    பாடசாலைக்கு தனிப்பட்ட தரிசிப்பை மேற்கொண்டு பாடமேம்பாடு அடைவுமட்ட
அதிகரிப்பக்கு மாணவர் ஆசிரியர்க்கு பூரண ஒத்துழைப்பை வழங்குதல்.