வீதிகளில் மாடுகள் நடமாட்டம் : போக்குவரத்து செய்வதில் பயணிகளுக்கு அசௌகரியம்.

0
466

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை – மணற்பிட்டி பிரதான வீதிகளிலும், குழுவினமடு, கொல்லநுலை, பட்டிப்பளை, மாவடிமுன்மாரி போன்ற வீதிகளிலும் மாடுகள் நடமாடுவதனால் போக்குவரத்து செய்வதில் அசௌகரியங்களை பயணிகள் எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடுகின்றனர்.

காலைவேளையிலும், மாலைவேளைகளிலுமே அதிக மாடுகள் வீதிகளில் நடமாடுவதாகவும், படுத்துறங்குவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையிருப்பதுடன், போக்குவரத்து செய்வதிலும் மிகுந்த கஸ்டத்தினை எதிர்கொண்டுவருவதாகவும் கூறுகின்றனர்.

அதேவேளை வீதிகளில் சாணம் நிரம்பியுள்ளமையினால், வாகனங்கள் செல்லுகின்ற போது, பக்கத்தால் செல்பவர்கள் மீது சாணம் வீசப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.