குடும்பிமலை காட்டுப்பகுதியில் வெட்டப்பட மரக்குற்றிகள் மீட்பு

0
312

மட்டக்களப்பு கிரான் குடும்பிமலை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை  நேற்று சனிக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொவிஸார் தெரிவித்தனர்.

 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான  மாலை பொலிஸார் சோதனையை நடாத்தியபோது மரங்கள் வெட்டப்பட்டு வியாபாரத்திற்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் மரக்குற்றிகளாக இருந்துள்ளதுடன் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்கள் தப்பியோடியுள்ள நிலையில் மரக்குற்றிகளை மீட்டுள்ளனர்

இது தொடர்பான விசாரனைகளை வாழச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்