வெடிப்பொருட்கள் மீட்பு – திருகோணமலையில் சம்பவம்

0
317

திருகோணமலை எரக்கண்டி பிரதேசத்திலிருந்து கடற்படையினரால் வெடி பொருட்கள் சிலவும் தூரத்திலிருந்து அவற்றை இயக்கக் கூடிய சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளன. கிழக்கு கடற்படையினர் மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது நேற்று  புதன் கிழமை இவ்வாறு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

கடற்படையினரால் நான்கு வகையான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, அவை மேலதிக பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

இதேவேளை புல்மோட்டை கொக்கிலாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதும் இவ்வாறான வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.